மென்பொருள் தாக்குதலாளர்கள் உலகெங்கிலுமுள்ள அரச, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளையே இலக்குவைக்கின்றனர்.
அவதானமான தாக்குதல்களால் ஒரு நாடு தன்னைப் பாதுகாக்கும் தன்மையைக்கூட இழந்துவிடுவதுடன் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய செல்வமும் அழிந்துவிடக்கூடும். இங்கு அண்மையில் இடம்பெற்ற பாரிய கணினி மென்பொருள் தாக்குதல்களைப் பார்க்கலாம்.
2011 – நடவடிக்கை Shady RAT எனும் தாக்குதலானது 2006இன் நடுப்பகுதியில் தொடங்கியது. இது நாட்டு அரசாங்கங்களையும் இராணுவ ஒப்பந்தகாரர்களையும் ஐ.நா. போன்ற அமைப்புகளையும் தாக்கத்தொடங்கியது.
2010 டிசம்பர் – பாகிஸ்தானின் தொழினுட்ப இராணுவப் பிரிவு இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையினரின் இணையத்தளங்களைத் தாக்கியது.
நவம்பர் 2010 – இந்திய இராணுவக் கணினிப் பகுதி பாகிஸ்தானிய இராணுவத்தாலும் வெளிவிவகார அமைச்சு, கல்வி மற்றும் நிதியமைச்சு போன்ற பல அமைச்சுக்களினாலும் செயற்படுத்தப்பட்டு வந்த இணையத்தளங்களின் தகவல்களைப் பெற்றுக்கொண்டது.
நவம்பர் 2010 – ஏப்ரலில் 18 நிமிடங்கள் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் இணைய நெரிசலானது சீனாவினூடாகச் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா ஒப்புக்கொள்கின்றது.
ஒக்ரோபர் 2010 – பிரித்தானிய அரசின் தொலைத்தொடர்புத் தலைமையகத்தின் தலைவர் அயின் லொபின், பிரித்தானியாவின் கணினிகள் ஒவ்வொரு மாதமும் 1000 தடவைகள் இலக்குவைக்கப்படுவதாகவும் பகைமை நாடுகளாலும் குற்றவாளிகளாலும் உண்மையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் எச்சரித்தார்.
செப்ரெம்பர் 2010 – Stuxnet வைரசினால் ஈரானின் Natanz அணுவாயுதச் செயற்பாடுகள் இலக்குவைக்கப்பட்டன. இதுதான் மிகவும் நவீனமான செயலிழக்கவைத்த வைரஸ் தாக்குதலாகும்.
ஜனவரி 2010 – கூகிளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பிற்கெதிராக அறிவுசார்ந்த சொத்துக்களைத் திருட வழிவகுத்த தாக்குதலானது சீனாவில்தான் ஆரம்பித்திருந்தது என்று கூகிள் தெரிவித்தது.
ஜுலை 2009 – அமெரிக்காவிலும் தென்கொரியாவிலும் அரசாங்கம், ஊடகம் மற்றும் நிதி இணையத்தளங்களிற்கெதிரான ஒருங்கிணைக்கப்பட்ட சேவை மறுப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
No comments:
Post a Comment